வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (16:56 IST)

இந்தியன் 2 படத்தில் விவேக்?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது. இந்த படமே கமலின் கடைசி படம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் இந்திய 2 படத்திற்காக கமல் மற்றும் ஷங்கருக்கு வாழ்த்துக்கள். முதல் பார்வை போஸ்டர் செம்ம. இதற்காகத்தான் நாம் காத்திருந்தோம் என தெரிவித்தார். 
 
இதை பார்த்த பலர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவும், கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இந்த வாழ்த்தா? என கேட்டு கேலி செய்தனர். 
 
இதற்கு விவேக் இப்போது பதில் அளித்துள்ளார். நான் பள்ளி நாட்களிலிருந்து இப்போது வரை கமல்ஹாசனின் ரசிகன். கதைக்கு தேவைப்பட்டால் ஷங்கர் என்னைக் கண்டிப்பாக கூப்பிடுவார் என சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். 
 
நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். ஆனால், கமலுடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.