வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:43 IST)

இந்தியன் 2வில் நீக்கப்பட்ட சிம்பு: லீக்கான முக்கிய காரணம்

இந்தியன்2 விலிருந்து சிம்பு நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தில் கமல்ஹாசனின் பேரனாக நடிக்க முதலில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சிம்பு நடிக்கவிருந்த பேரன் கேரக்டரில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. சிம்பு நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் சிம்பு இந்தியன் 2வில் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டிருப்பதால், இப்படத்திற்கு அவரால் கரெக்டாக கால்ஷீட் கொடுக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் படத்தில் நடிக்கவிருந்த சிம்புவிற்கு படக்குழுவினரால் ஒழுங்காக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே சிம்பு சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
 
ஆகவே சிம்புவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என முடிவு செய்த படக்குழு சிம்புவிற்கு பதிலாக சித்தார்த்தை ஒப்பந்தம் செய்துவிட்டனராம்.