ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (21:45 IST)

'இந்தியன் 2' படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத்! வாழ்த்து சொன்ன ஷங்கர்!

1996ம் ஆண்டு கமல், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா நடித்த இந்தியன் படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. 
 
ஷங்கர் இயக்கிய இப்படம் இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் சுதந்திர போராட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தமிழ் ரசிகர்களுக்கு சொல்லும். 
 
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் ஏற்படும் அவலத்தை தோலுரித்து காட்டிய ஷங்கர் மீண்டும் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கடந்த 18ம் தேதி முதல் ஷுட்டிங் தொடங்கிவிட்டது. 
 
இந்த முறை ஊழல் அரசியல் வாதிகளை களையெடுப்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.