1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:35 IST)

200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை: வெற்றியை நோக்கி இந்திய அணி

சர்வதேச அளவில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளராக இந்திய அணியின் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 

 
கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.
மேலும், நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி இப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின்.
 
37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஆசியா அளவில் தற்போது அஸ்வின் மிகவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக உள்ளார்.
 
மேலும், 2-வது இன்னிங்ஸில் 377 ரன்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. வெற்றிபெற 434 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியது. இப்போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து தடுமாறி வருவதால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.