1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (08:37 IST)

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட நகரில்  நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று பட்டியலில் 3 ஆம் இடத்தில் இள்ளது. இதற்காக பல்வேறு வீரர் வீராங்கனைகள் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கின்றனர்.
பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்துவிற்கு ஐதராபாத்  விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.