வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:48 IST)

ஏர் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலம்தான் என்ன??

ஏர் இந்தியா நிறுவனம் கடன் காரணமாக மீண்டெழ முடியாமல் சிக்கி தவித்து வருகிறது. இந்நிறுவனம் எடுத்த எந்த முடிவுக்கும் எதிர்ப்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. இதனால், ஏர் இந்தியாவின் எதிர்காலம் கேள்விகுறியாய் உள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனம் தனது கடைனி தீர்க்க பங்குகளை தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. ஆனால், இந்த பங்குகளை வாங்கவும் ஆள் இல்லை. 
 
ஆம், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டன. 
 
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கும் அளவுக்கான பெரிய நிறுவனம் நாங்கள் இல்லை என கூறிவிட்டது. டாடா குழுமமும் இதில் இருந்து விலகிவிட்டது. 
ஏர் இந்தியா பங்கு விலக்கலுக்கு மத்திய அரசு விதித்திருந்த நிபந்தனைகளே பிற நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து விலகி கொள்ள காரணம் என கூறப்படுகிறது.
 
உள்நாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டினாலும் வெளிநாட்டு நிறுவனங்களான லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்திருக்கின்றன. 
 
எனவே இதை வைத்து கடன் பிரச்சனைகளில் இருந்து ஏர் இந்தியா வெளிவரும் என நம்பிக்கை உள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.