ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்: பெயர் கூற மறுத்த பிசிசிஐ!!
இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்து போட்டியில் விளையாடியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு சோதனை மேற்கொண்ட போது இந்திய கிரிக்கெட் வீரருக்கு முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது.
மேலும் அந்த வீரர் 2016-ல் நடந்த எதோ ஒரு போட்டிக்காகத்தான் ஊக்கமருந்து பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் பிசிசிஐக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், யார் அந்த இந்திய வீரர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இன்னும் சில வாரங்களில் அந்த தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த இந்திய வீரர் தடை செய்யப்பட்ட ஏ.எஃப்.எஃப் (AFF) என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.