தமிழ்நாட்டை தோற்கடித்த இந்திய கடற்படை – அகில இந்திய ஹாக்கி போட்டி

Last Modified வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (12:39 IST)
சென்னையில் நடைபெற்று வரும் 93வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது இந்திய கடற்படை அணி.

எம்.சி.சி, மற்றும் முருகப்பா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 93வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய கப்பற்படை அணியோடு தமிழ்நாடு ஹாக்கி க்ளப் அணி மோதியது. தீவிரமான ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது இந்திய கப்பற்படை அணி.

இரண்டாவது சுற்றில் பெங்களூர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் அணியை தோற்கடித்தது. இன்றைக்கு நடைபெறும் மூன்று ஆட்டங்களில் முதல் சுற்றில் தமிழக அணியும் ரயில்வே அணியும் மோத இருக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :