புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (10:13 IST)

”பாராசூட்டுக்கு ஆசைப்பட்ட தோனி”..அனுமதி கொடுத்த ராணுவம்

தோனியின் பாராசூட் ரெஜிமெண்ட் பயிற்சி கோரிக்கைக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய அணியின் கிரிகெட் வீரர் தோனி, உலகக் கோப்பை போட்டிகளில் மோசமாக விளாயாடிய நிலையில், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போகிறார் என பலர் கூறிவந்தனர். இதனிடையே தோனி ராணுவத்தில் 2 மாதங்கள் தங்கி பயிற்சி பெற போவதாக அறிவித்திருந்த நிலையில்,  மேற்கு இந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி பங்கேற்கவில்லை. இதனால் அவர் பெயரை அணித் தேர்விலிருந்து பிசிசிஐ நீக்கியது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக உள்ள தோனி பாராசூட் ரெஜிமெண்டில் தங்கி பயிற்சி பெற அனுமதி தர வேண்டும் என கோரியிருந்தார். அவரது கோரிக்கையை தலைமை தளபதி ஜெனரல் பிவின் ராவத் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தால், தோனிக்கு பாராசூட் ரெஜிமெண்ட் பயிற்சி தரப்பட உள்ளது.