பைக்கிலிருந்து சறுக்கி விழுந்த கிரிக்கெட் வீரர்கள்.. வைரல் விடியோ

Last Updated: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:41 IST)
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் இருவர், கிரிக்கெட் மைதனத்தில் பைக் ஓட்டிச் சென்றபோது சறுக்கி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இந்நிலையில், இலங்கை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், சேஹன் ஜெயசூர்யா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் இருவரும், இலங்கை அணிக்கு பரிசாக அளிக்கப்பட்ட மோட்டார் பைக் ஒன்றை எடுத்துகொண்டு அதி வேகமாக மைதானத்தை சுற்றியடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மோட்டார் பைக் சறுக்கியதால் இருவரும் கீழே விழுந்தனர். எனினும் இதில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :