இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாணமாக கொண்டாடிய நடிகை பூனம் பாண்டே!

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (16:08 IST)
வெற்றி பெற்ற  இந்திய அணிக்கு மேலாடையின்றி ஹாட் போட்டோவை சமர்ப்பித்துள்ளார் நடிகை  பூனம் பாண்டே.
ஐசிசி உலகக் கோப்பை 2019 தொடரின் 14-வது போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அபாரமாக விளையாடிய இந்திய அணி 352 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மேட்ச்சில் இந்திய வெற்றி பெற்றதை நம்மில் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அந்தவகையில் சர்ச்சைக்குப் பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது மகிழ்ச்சியை வித்யாசமான முறையில் இந்திய அணிக்கு வெளிப்படுத்தியுள்ளார். 


 
நடிகை பூனம் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் மேலாடையின்றி எடுத்துக்  கொண்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இதனை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
முன்னொரு சமயத்தில் நடிகை பூனம் பாண்டே இந்தியா உலகக்கோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A Pic for Team India. #WCW2019

A post shared by Poonam Pandey (@ipoonampandey) onஇதில் மேலும் படிக்கவும் :