திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (17:12 IST)

முன்னேற முடியாமல் தவிக்கும் இந்திய அணி: காரணம் என்ன??

இந்திய அணி டி20 போட்டி தரவரிசையில் முதல் இஅடத்திற்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. 


 
 
அதாவது, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினாலும், நம்பர் 1 இடத்துக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
தற்போது டி20 அரங்கில் நம்பர் 1 அணியாகவுள்ள நியூசிலாந்து அணியை இதுவரை டி20 அரங்கில் இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது 122 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது இந்திய அணி. இந்த டி20 தொடரை முழுமையாக கைப்பற்றினால், இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறும், நியூசிலாந்த 5 ஆம் இடத்திற்கு தள்ளப்படும்.
 
இவ்வாறு நடந்தால் 124 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் முதல் இடத்தை அடைந்துவிடும். இதனால் இந்திய அணி முதல் இடத்திற்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.