1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (23:04 IST)

இந்திய வீராங்கனை 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை !

கடந்த 2019 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் கோமதி என்ற வீராங்களை தங்கப்பதக்கம் வென்றார்.

அதன்பின் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டிகளில் பங்கேற்க அத்லெடிக் இண்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.