புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (16:32 IST)

தமிழகத்தின் தங்க மங்கையின் தங்கம் பறிப்பு!!

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை மற்றும் அவரது பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.  
 
கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முதல்கட்ட சோதனையில் தெரிய வந்தது.   
 
கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என அப்போது கூறினார். அதன் பின்னர் தற்போது இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனால் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் தங்கத்தையும் திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.