பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி- ஆஸி பேட்டிங்… இந்திய பவுலர்கள் அபாரம்!
இன்று மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இன்று பாக்சிங் டே போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
களமிறங்கிய ஆஸி அணியின் பேட்டிங்கை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களான பூம்ரா மற்று அஸ்வின் ஆகிய இருவரும் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் தேனீர் இடைவேளை வரை ஆஸி 135 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் தனது அறிமுகப்போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கேப்டன் கோலி இல்லாத நிலைமையில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுவது ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.