திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Corona 1
திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று
siva| Last Updated: வெள்ளி, 25 டிசம்பர் 2020 (14:50 IST)
திமுக எம்எல்ஏ சேகர்பாபு அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு ஏற்பட்டதை அடுத்து தற்போது மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த
சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அப்பாவி மக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

KN Nehru
திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று
இந்த நிலையில் தற்போது திமுக முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கே என் நேரு அவர்கள் தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார். திமுகவின் சேகர்பாபு மற்றும் கேஎன் நேரு ஆகியோர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவியுள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :