செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (21:33 IST)

தாராவியில் இன்று கொரோனா தொற்றுகூட இல்லை: மகிழ்ச்சியில் மும்பை மக்கள்!

தாராவியில் இன்று கொரோனா தொற்றுகூட இல்லை
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது என்றும் குறிப்பாக மகாராஷ்டிராவில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் தான் அதிக கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மும்பை தாராவியில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக ஒரு நோயாளி கூட அங்கு கண்டறியப்படவில்லை. ஆசியாவிலேயே மிகவும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கும் பகுதிகளில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படாதது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட தாராவி பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலால் மும்பை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்