1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:18 IST)

2 ஓவர்களில் 5 நோ பால்கள்: இந்திய வீரருக்குக்கு குவியும் கண்டனங்கள்

arshdeep singh
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்  2 ஓவர்கள் வீசி 5 நோ பால் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் 37 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான போட்டியில் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மூன்று நோபால் வீசியதால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரில் இரண்டு நோபால் வீசி 18 ரன்களை வாரி வழங்கினார்
 
2 ஓவர்கள் வீசி 5 நோபால்களுடன் 37 ரன்களை எதிரணிக்கு வழங்கிய அர்ஷ்தீப் சிங்கிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva