திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (22:25 IST)

கபடி மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

துபாயில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
 
துபாயில் நடைபெற்று வந்த இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய 6 நாட்டின் அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. 
 
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 18-11 என்ற புள்ளிக்கணக்கில்  முன்னிலை வகித்தது.
 
இந்த நிலையில் இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 44 புள்ளிகளும் ஈரான் 26 என்ற புள்ளிகளும் எடுத்ததால் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.