திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜூன் 2018 (21:07 IST)

போட்டியில் விளையாடாமல் நாடு திருப்பும் பும்ரா? காரணம் என்ன?

இந்திய அணி சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களின் பும்ரா நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. 
 
பயிற்சியின் போது, பும்ராவுக்கு கைவிரலில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்கும் டி20, ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடற்தகுதி பெற்றபின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு மீண்டும் அணிக்குத் திரும்புவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.