1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (11:28 IST)

ஓய்வு அளிக்கப்பட்டதால் தோனி என்ன செய்தார் தெரியுமா?

இந்தியன் அணியின் முன்னாள் கேப்டனும், வீக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி நேற்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் வீரர்களுக்கு கிட்பேக் சுமந்தபடி தண்ணீர் கொண்டு வந்தார்.
 
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
 
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் வீக்கெட்கீப்பராக களமிறங்கனார்.
 
இதனால் தோனி நேற்று போட்டியில் விளையாடவில்லை. ஆனாலும், இந்தியா அணி பேட்டிங் செய்த போது வீரர்களுக்கு கிட்பேக் சுமந்தபடி தண்ணீர் கொண்டு வந்தார். இந்த வேலையை பொதுவாக ஒரு மூத்த வீரர் செய்வதில்லை. ஆனாலும், தோனி இதை பற்றி கவலைப்படாமல் இறங்கி வந்து அணியின் வீரர்களுக்கு வேலை செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.