3வது டி-20 போட்டி: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா

Last Modified ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிட்னி மைதானத்தில் 3வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. ஷார்ட் 33 ரன்களும், கேப்டன் பின்ச் 28 ரன்களும் எடுத்தனர்.


இந்த நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே டி-20 தொடர் சமன் ஆகும்,. இல்லையேல் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் நிலை உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :