இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...

<a class=india australia" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-11/23/full/1542966063-4878.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:37 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் -20 போட்டியில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 4 நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று மெல்போரினில் நடைபெறும் இரண்டாவது டி -20 போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆடி வரும் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக கேப்டன் முடிவு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஜோடி பின்ச் , ஷார்ட் நன்றாக அடித்தளம் அமைத்தனர்.
 
இந்நிலையில் 19 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. ஆஸ்ஹிரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் கலீல் அறபுதமாக பந்து வீசி  கிறிஸ்லினை அவுட்டாக்கினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :