திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (15:25 IST)

இந்தியாவில் ஓடிடியில் அதிக கவனம் ஈர்த்த படம் – சூரரைப் போற்றுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியாவில் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் தில் பச்சேரா படம் முதலிடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் அதுபோல சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இந்திய அளவில் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படங்கள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கடைசியாக வெளியான தில் பச்சேரா திரைப்படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அந்த படம் இலவசமாகப் பார்க்கும்படி வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் தமிழ்ப் படங்களான சூரரைப் போற்று இரண்டாம் இடத்தில் மூக்குத்தி அம்மன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.