வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (14:04 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடர் தொடங்குகிறது 
 
நாளை முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கவிருக்கும் நிலையில் பிசிசிஐ அதிகாரபூர்வமாக இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
விராத் கோஹ்லி, மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி மற்றும் பும்ரா. மேலும் அணியின் சப்ஸ்டியூட்களாக கில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், சயினி, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
 
ஒருநால் மற்றும் டி20 தொடரில் இடம்பெற்ற நடராஜன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது