5வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது
சற்று முன் வரையில் 16 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் எடுத்துள்ளார்
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்குமா? அல்லது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்