ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (17:22 IST)

காமன்வெல்த்தில் ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!

triple jump
காமன்வெல்த்தில் ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!
தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளியை இந்தியா வென்று உள்ள தகவல் வெளியாகியுள்ளது
 
 காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ்பால் 17.03 மீட்டர் தாண்டி தங்க பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல் இதே பிரிவில் அப்துல்லா என்பவர் 17.02 மீட்டர் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் 
 
இந்தியா இதுவரை 16 தங்கம் உள்பட 45 பதக்கங்களை வென்று காமன்வெல்த் போட்டியில் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.