திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (17:23 IST)

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடி: அலியா பட் வாங்கும் தொகை

alia bhat
இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
பிரபல நடிகர் நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளனர் என்பதும் அவர்களது கணக்குகளில் லட்சக்கணக்கான மில்லியன் கணக்கான பாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதற்கு 85 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக அவரது திரைப்படம் வெளியாகும்போது இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு என்று ஒரு காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மூலம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது