இன்று அனுப்பிய செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது: இஸ்ரோ அறிவிப்பு
இன்று அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து செய்த செயற்கைக்கோள் உள்பட 2 செயற்கைக்கோள்கள் இன்று அனுப்பப்பட்ட எஸ் எஸ் எல் வி ராக்கெட்டில் இணைக்கப்பட்டு இருந்தது
அந்த ராக்கெட்டில் இருந்த செயற்கைகோள்களின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் அந்த சிக்னல்களை பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் தற்போது வரை செயற்கைக்கோள்களின் சிக்னல்கள் கிடைக்காததை அடுத்து அந்த செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது
எஸ்எஸ்எல்சி டி1 ராக்கெட்டில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் செய்த செயற்கைகோள் உள்பட 2 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது