1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:12 IST)

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற இந்தியாவின் அதிரடி முடிவு..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ள நிலையில் வங்கதேசம் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று கடைசி சூப்பர் 4 போட்டி நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் ஒரு ஓவரில் 5 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி விளையாடுகிறது. இன்றைய போட்டியின் முடிவு இறுதிப் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் இது ஒரு சாதாரண போட்டியாகவே கருதப்படுகிறது
 
இருப்பினும்  இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வரும்  17ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva