1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:37 IST)

பங்களாதேஷோடு இன்று மோதும் இந்தியா… முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

ஆசியக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் இன்று சூப்பர் நான்கு சுற்றின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியம் இல்லாத போட்டி என்பதால், சில சீனியர் வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முகமது சிராஜ், ஜாஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.