செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (11:12 IST)

இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி… சாதனை படைத்த கோலி & கோ!

இந்திய அணி நியுசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் நடந்த இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றுள்ளது. டெஸ்ட் அரங்கில் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றி இதுதான். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.