1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (10:27 IST)

இந்திய – ரஷ்ய உச்சிமாநாடு; இன்று டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புதின்!

இந்திய – ரஷ்ய உச்சிமாநாடு இன்று டெல்லியில் நடைபெறும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வருகிறார்.

இந்திய – ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான உறவுநிலை குறித்து விவாதிக்க உள்ளனர்.

மேலும் இருநாடுகளுக்கு இடையேயும் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த உச்சி மாநாடு ரஷ்ய – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.