உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

wrestling
Last Modified செவ்வாய், 23 அக்டோபர் 2018 (07:40 IST)
ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். 
 
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகரில் நடைபெற்று வந்தது. இதில் சிறப்பாக விளையாடி பல்வேறு கட்டங்களை தாண்டி வந்த இந்திய வீரர் பஜ்ரங் பூனியா நேற்றைய இறுதிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவை எதிர்கொண்டார்.
 
தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பஜ்ரங், பின்னர் டகுடோவின் அதிரடியை தாக்குப் பிடிக்க முடியாமல் 16-9 என்ற கணக்கில் தோல்வியுற்றார். டகுடோ முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வெல்ல, இரண்டாம் இடம் பிடித்து இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ரஷ்யாவை சேர்ந்த வீரர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :