1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (17:50 IST)

வெள்ளி பதக்கம்: சிந்துவை பாராட்டிய மோடி!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று மகளிருக்கான பாட்மிண்டன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. 
 
இப்போட்டியில் சிந்துவை 13-21, 16-21 என்ற நேர் செட்களில், வீழ்த்தி சீன தைப்பே நாட்டு வீராங்கனையான டாய் ஸூயிங் வெற்றி கண்டார். பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும், வீராங்கனையும் இதற்கு முன்னர் வெள்ளிப் பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துவை பாராட்டியுள்ளார். அதில், சிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். பி.வி சிந்து இந்தியாவின் சிறந்த திறமை மிக்க, ஊக்கமளிக்கும் வீரர்களில் ஒருவர். அவரது திறமை மற்றும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது என் பதிவிட்டுள்ளார்.