புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2018 (05:46 IST)

டி-20 போட்டியிலும் தொடர்கிறது இந்திய அணியின் வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ஒருநாள் போட்டி தொடரில் 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியிலும் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் குவித்தது. தவான் 72 ரன்கள் அடித்தார்.

204 என்ற இமாயல இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ் 70 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.