1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (18:54 IST)

அதிரடியாய் வெடிக்கும் இந்தியா; திணறும் தென் ஆப்பிரிக்கா

முதலாவது டி20 போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிகஸர்களை பறக்கவிட்டு வருகிறது.

 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி ஆரம்பம் முதல் அதிரடியாக அடித்து ஆடி வருகிரது. ரோகித் சர்மா முதலில் ஓவரிலே 2 சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார். 9 பந்துகளுக்கு 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கோலி தவானுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
 
இருவரும் சேர்ந்து விளையாடி வருகின்றனர். ஒருபக்கம் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மறுபக்கம் தவான் அதிரடியாக விளையாடி வருகிறார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்துள்ளது. டி20 போட்டியில் இந்திய அணிக்கு இது ஒரு நல்ல ஆரம்பம் என்பது குறிப்பிடத்தக்கது.