புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (17:45 IST)

பேட்டிங் பிட்ச்சில் பவுலிங் செய்ய முன்வந்த தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடர் தொடங்கியுள்ளது.
 
டெஸ்ட் தொடரை கைவிட்ட இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் நடைபெற உள்ளது.
 
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. இந்த போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
 
இந்த பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.