டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

Women's Cricket
Last Updated: ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (17:32 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது 5போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது.
 
முதல் 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய மகளிர் அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
 
இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி தென் ஆப்பிரிக்கா அணி தும்சம் செய்து வருகின்றனர். ஒருபக்கம் கோலி மறுபக்கம் மிதாலி சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :