1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (21:49 IST)

இந்திய அணி அபார வெற்றி: மூக்குடைத்து கொண்ட ஆஸ்திரேலியா!!

இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.


 
 
இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் குவித்தது. 
 
இதனை தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே குவித்தது.
 
இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 50 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தியுள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதில் ஒரு சுவாரஸ்யமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.