புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (18:07 IST)

ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன் இலக்கு!!

இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
 
இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் குவித்துள்ளது. 
 
ஆஸ்திரேலிய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாட உள்ளது.