திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (08:08 IST)

5வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: குவியும் வாழ்த்துக்கள்

india won wi1
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது 
 
நேற்று நடந்த ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்தார்
 
இதனையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் அக்சர் படேல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அர்ஷப் சிங் தொடர் நாயகன் விருதை அரசின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது