திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (21:41 IST)

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா!

ind vs as final
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா!
கடந்த சில நாட்களாக காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அந்த அணியின் வீராங்கனைகள் சற்றுமுன் களத்தில் இறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர்
 
சற்று முன் வரை அந்த அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெல்வதற்கு தீவிரமாக விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்