செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:37 IST)

3வது ஒருநாள் போட்டியிலும் வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா அபாரமாக வென்று உள்ளது
 
கடந்த 6ஆம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் 9ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் மொத்தமாக தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது