திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (23:21 IST)

அதிமுக வேட்பாளர் மறைவுக்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் - ஓபிஎஸ்- இபிஎஸ்

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் சமீபத்தில் நிறவடைந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக,  எதிர்க்கட்சியன அதிமுக, தேமுதிக, ம. நீ.ம உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில்,  ஆளும்கட்சியான திமுக மீது ஈபிஎஸ் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர்.
அதில்,     நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மறைவுக்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

அராஜகத்தில் ஈடுபடுகின்ற திமுகவினர் மீது தேர்தல் ஆணையமும் காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் 24 பேர்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்ட புகாரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.