1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (08:01 IST)

இன்று 3வது டி20 போட்டி: மே.இ.தீவு அணியை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது 
 
கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பதும்,ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி புத்துணர்ச்சியுடன் இருப்பதால் இந்தியாவின் வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது