இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்

match
Last Modified சனி, 14 ஜூலை 2018 (15:26 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. 
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை வென்ற நிலையில், தற்போது மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 
 
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஷிகர் தவன்,  ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடியால் வெற்றி பெற்றது. 
 
அதேபோல், இந்த வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று 2 வது ஒருநாள் போட்டியில் நடைபெறவுள்ளது. 
 
இந்த மேட்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் இப்போட்டியில் களமிறங்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :