புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:37 IST)

இந்தியா-இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று மாலை தொடங்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்திய அணியை பொறுத்தவரை அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் களமிறங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. அதே போல் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்தியா கடந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது