வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (09:02 IST)

யு-20 கோடிப் கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா சாதனை

அண்டர் 20, இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி அர்ஜென்டினாவை வீழ்த்தியுள்ளது.
 
ஸ்பெயின் நாட்டில் யு-20 இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. அட்டம் முதலிலிருந்தே இரண்டு அணி வீரர்களும் பரபரப்பாக விளையாடினர்.
 
இந்திய அணி வீரர் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார், அதேபோல் அர்ஜெண்டினா அணியும் ஒரு கோல் அடித்தது. சமநிலையிலே போய்க் கொண்டிருந்த மேட்சில் திடீரென 68-வது நிமிடத்தில் இந்திய வீரர் அன்வர் அலி அதிரடியாக கோல் அடித்து இந்திய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.