புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (09:16 IST)

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி: குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு

சிட்னியில் இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா, ஷமி தலா இரண்டு விக்கெட்டுக்களையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடினால் இந்திய சுழலில் மீண்டும் விக்கெட்டுக்கள் சரியும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.